திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த அரசுப் பணியாளர்களின் வாரிசு களுக்கு அரசு விதிகளின்படி கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஷாலினி என்பவ ருக்கு ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும், ராம்குமார் என்பவருக்கு ஆம்பூர் வட்டம் பாலூர் கிராம நிர்வாக அலுவலராகவும், துக்காராம் என்பவருக்கு திருப்பத்தூர் உதவி ஆணையர் (கலால்) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா வழங்கினார்.
அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago