கலப்பட டீசல், ரேஷன் அரிசி கடத்திய நால்வர் கைது : உணவு கடத்தல் தடுப்பு போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

லாரிகளில் கலப்பட டீசல் மற்றும் ரேஷன் அரிசியை கடத்தியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், வாளையாறு சாலையில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த டேங்கர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில், கலப்பட டீசல் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டி வந்த செல்வபுரம் எல்.ஐ.சி காலனியைச் சேர்ந்த செல்வகருப்பையா(47), தனியார் நிறுவன விற்பனை மேலாளரான குனியமுத்தூரைச் சேர்ந்த சபாபதி(48) ஆகியோரை கைது செய்தனர். கலப்பட டீசல் கடத்த பயன்பட்ட 2 லாரிகள், 4 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, குட்டி கவுண்டன் பதி பகுதியில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்த போது, லாரியில் ஒன்றரை டன் ரேஷன் அரிசியை கடத்திய எட்டிமடையைச் சேர்ந்த காசிநாதன்(40), குனியமுத்தூரைச் சேர்ந்த அன்சர்அலி(42) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்