சாலையில் வசித்த ஆதரவற்ற 22 பேர் மீட்பு : காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை

By செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வசித்த ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்கள் 22 பேர் மீட்கப்பட்டனர். அவர்களை காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி சார்பில் நகரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தங்கியுள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில், முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட கோயில்கள், பயணியர் நிழற்கூடங்கள், அரசு அலுவலகக் கட்டிடங்கள் என சாலையோரங்களில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்த ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர்கள் 22 பேரை மீட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு அங்கு இரவு உணவு, உடை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

மேலும், அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காப்பகத்தில் தங்குவதற்கான நிலை ஏற்பட்டவுடன் அவர்களை அரசு காப்பகத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் செரிரோட்டில் நடந்த மீட்புப் பணியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். அப்போது, மீட்கப்பட்டவர்களிடம் அவர்கள் குறித்த விவரங்களை ஆணையர் கேட்டறிந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்