உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். இது தொடர்பாக முதல்வரை சந்திக்கவுள்ளோம் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கடந்த 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் சாலைப் பணியாளர் வேலைவாய்ப்பு பெற்றோம். அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் 2002-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி 10 ஆயிரம் பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டு எங்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது. சட்ட போராட்டம் நடத்தி மீண்டும் 2006-ம் ஆண்டில் பணி வாய்ப்பு பெற்றோம். அப்போது, 94 பேர் உயிரிழந்திருந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கும், 2006-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 300 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாதங்களையும் பணிக்காலமாக சேர்த்து ஓய்வு பெறும்போது பணப் பலனை வழங்க வேண்டும். இக்கோரிக்கையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விரைவில் கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago