அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் வசித்து வந்த 243 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நடவடிக்கை மேற்கொண்டது. அதில், ஆற்றை ஒட்டி முதல் வரிசையில் இருந்த 93 குடும்பங்கள் கடந்த மாதம், சென்னை மாநகருக்குள் புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி.பூங்கா குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் மறு குடியமர்வு செய்யப்பட்டன.
அங்கு மீதமுள்ள 150 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. பயனாளிகளிடம் உரிய ஆவணங்களைப் பெற்று, அவற்றை சரிபார்த்து, அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த சில தினங்களில் அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago