கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனத்திற்கு பசுமை வளாக விருது :

வடலூரில் இயங்கிவரும் கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற் றும் பயிற்சி நிறுவனத்திற்கு மத் திய அரசின் பசுமை வளாக விருதினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று வழங் கினார்.

மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக கல்வி குழுமம், இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் பராமரித்தலில் சிறந்து விளங்கும் கல்வி நிறு வனங்களை தேர்வு செய்து பசுமை வளாக விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் 34 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இந்த விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில் கடலூர் மாவட்டம் வடலூரில் இயங்கிவரும் அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதினை இணையவழி மூலம் மத்திய அரசு கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது. இந்த விருதை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கலாவிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டு தெரி வித்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியது:

பயிற்சி நிறுவன வளாகத்தில் பசுமை, தூய்மை, பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலும் தவிர்த்தல், மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுகாதாரமான வளாகம் மற்றும் சுத்தமான குடிநீர் உள்ளிட்டவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக பசுமை வளாக விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பழனி, அமுதா,சேவியர், விரிவு ரையாளர்கள் நல்லமுத்து, அனந்தபத்மநாபன் ஆகியோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்