திரவ யூரியாவை பயன்படுத்தி அதிக மகசூல் : மண், நீர், சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கா னந்தல் அரசு விதைப்பண்ணையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கட்டுப்பாட்டு நிறு வனம் இணைந்து இப்கோ நானோ யூரியா நேற்று அறிமுகம் செய்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் கூறியது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இப்கோ நானோ யூரியா முதன் முதலாக வடக்கானந்தல் அரசு விதைப்பண்ணையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெற்பயிர் வயலில் தெளிப்பு தொடர்பாக முன்னோடி விவசாயிகள் முன்னி லையில் செயல்விளக்கம் காண் பிக்கப்பட்டது. திரவ யூரியாவினை பயன்படுத்துவதால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அதிக மகசூல் கிடைத்திடவும் வழிவகை செய்கிறது.

மேலும், அனைத்து வகை பயிர்களுக்கும் திட யூரியாவை மேல் உரமிடுவதற்கு மாற்றாக இந்த திரவ வடிவ இப்கோ நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அரசு விதைப்பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு விதைச்சான்று பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக் குநர் எம்.ஆர்.ஜெகந்நாதன், வேளாண்மை துணை இயக்குநர் செ.சுந்தரம் மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரவ யூரியாவை பயன்படுத்துவதால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்