லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமிஹயக்ரீவர் கோயிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா நடை பெறும். இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நேற்று தொடங்கியது. இவ்விழா வரும் 22-ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலை பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. மாலையில் விசேஷ அலங்காரம் நடக்கிறது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று லட்சுமி ஹயக்ரீவருக்கு திருமஞ்சனமும், திருச்சி ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட விசேஷ மாலையுடன் சாமிக்கு வழிபாடும் நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago