முறைகேடுகளை களைய வீடுவீடாகச் சென்று ரேஷன் அட்டை கணக்கெடுப்பு நடத்த புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை திட்டமிட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் அப்போதைய துணைநிலை ஆளு நர் கிரண்பேடியின் உத்தரவால் அரிசிக்கு பதிலாக வங்கி கணக் கில் பணம் வழங்கப்பட்டது. இதனால் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து பொறுப் பேற்று என்ஆர் காங்கிரஸ் - பாஜககூட்டணி அரசின் தேர்தல் வாக்கு றுதிப்படி ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
தற்போது அமைச்சர்களிடம், பொதுமக்கள் பலரும் ரேஷனில்அரிசி வழங்க கோருகின்றனர். இச்சூழலில் ரேஷன் அட்டைகளில்உள்ள நீண்ட கால பிரச்சினை களையும் குடிமைப்பொருள் வழங்கல்துறை சரிசெய்ய திட்டமிட் டுள்ளது.
புதுச்சேரியில் குடிமைப் பொருள் வழங்கல்துறை மூலம் மக்களுக்கு ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3.4 லட்சத்துக்கும் அதிகமான மஞ்சள், சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வசதி படைத்த பலர் சிவப்பு அட்டை வைத்திருப்பதாகவும் புகார்கள் வருகின்றன. மேலும், மாநில எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக 1.7 லட்சம் சிவப்பு ரேஷன் அட்டைகளுக்கு முறை யான கணக்கெடுப்பு நடத்தி களஆய்வு மேற்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது.
புதுச்சேரி அரசு ரேஷன் அட்டை களை கணக்கெடுப்பு செய்ய கடந்த ஆண்டு ஜூன் 19-ல் உத்தரவிட்டது. அரசு ஊழியர்கள் தரப்பில் கரோனா பரவல் காரணம் தெரிவிக்கப்பட்டதால் ஒத்தி வைக்கப் பட்டது. அதையடுத்து இக்கணக் கெடுப்பு பணியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்த முடிவுஎடுத்தனர். அப்போதும் கரோனா வால் பணிகள் நடக்கவில்லை.
இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரியில் கடந்த 2010-ம் ஆண் டுக்கு பிறகு தகுதியான பலர்சிவப்பு அட்டை வேண்டுமென விண் ணப்பித்தும் வழங்கப்படவில்லை. மேலும் கடந்த 11 ஆண்டு காலத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் மற்றும்புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்கும் சிவப்பு ரேஷன் அட்டை மற்றும் உணவு தானியங்கள் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். புதுச்சேரியில் பல ஏழைகளிடம் சிவப்பு அட் டைக்கு பதிலாக மஞ்சள் அட்டை தான் உள்ளது. முதலில் அரசுப் பணியில் உள்ளோர் எந்த அட்டை வைத்துள்ளனர் என்று துறைவாரியாக கடிதம் பெற வேண்டும். அதேபோல் சிவப்பு அட்டைத்தாரர்களை முதலில் ஆய்வு செய்தாலே பல உண்மை தெரியவரும்” என்கின்றனர்.
குடிமைப்பொருள் வழங்கல் துறையில் விசாரித்தபோது, “ரேஷன் அட்டைகளை கணக்கெடுக்க இருமுறை திட்டமிட்டு கரோனாவால் ஒத்தி வைக்கப் பட்டது.
ரேஷன்கடைகள் திறக்க திட்டமிடுவதால் வீடுவீடாகச் சென்றுரேஷன் அட்டைகளை கணக்கெடுக் கும் திட்டமுள்ளது. இப்பணிக்கு இருவார காலம்போதும்.
குறிப்பாக ஏற்கெனவே திட்டமிட்டப்படி இப்பணியில் 35 கண்காணிப்பாளர்கள், 71 உதவி யாளர்கள், 250 யூடிசி, எல்டிசி பணியாளர்களை ஈடுபடுத்தும் திட்டமுள்ளது.
இப்பணி நிறைவடைந்தால் புதுச்சேரியில் உள்ள உண் மையான ரேஷன்அட்டை விவரம் தெரியவரும்” என்று குறிப் பிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago