கடலூர் வில்வராயநத்தம் பூங் காவை சுத்தம் செய்யும் பணி தொடக்கப்பட்டது.
கடலூர் பெருநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பூங்காவினை சுத்தம் செய்யும் பணியை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சி யர் கி.பாலசுப்ரமணியம் நேற்று தொடக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார். மேலும் பூங்காவினை சுத்தம் செய்து சிறந்த முறையில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக அவர் வில்வராயநத்தம் பகுதியில் அமைந்துள்ள பார்வை திறன் குன்றியோர் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காந்திநகர், தனலட்சுமி நகர் பகுதிகளில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐய்யப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப் ரமணியம் தலைமையில் கரோனா வில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நகராட்சி ஆணையர் மகேஸ்வரி,நகராட்சி பொறியாளர் புண்ணியமூர்த்தி, வட்டாட்சியர் பலராமன், உள் ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலு வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரோனாவில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago