விருத்தாசலம் அருகே - நெல் கொள்முதலில் முறைகேடு அலுவலர் பணியிடை நீக்கம் :

By செய்திப்பிரிவு

விருத்தாசலம் அருகே சி.கீரனூர் கிராமத்தில் அரசு நெல் கொள் முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் விருத்தாசலம் சுற்று வட்டார கிராம விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் தினசரி 1,000-க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பெயரில் வியாபாரிகள் போலி ஆவணங்கள் மூலம் நெல் மூட்டை களை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தலைமையில் அதிகாரிகள் விசா ரணை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் விவசாயிகள் பெயரில் தினந்தோறும் வியாபாரிகள் நெல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டிற்கு நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தராக இருக்கும் பரமசிவம் உடந்தையாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மண்டல மேலாளர் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்