மராமத்துப் பணி முடிந்து - வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு மீண்டும் குடிநீர் அனுப்பி வைப்பு :

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக மீண்டும் தண்ணீர் அனுப்பும் பணி தொடங்கியது.

கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.30 அடி ஆகும். இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னையின் குடிநீர் தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் ஏரி மராமத்துப் பணி காரணமாக, அதில் உள்ள நீரை வற்றச் செய்து, சென்னை குடிநீர் அனுப் பப்படுவது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து பரவனாற்றில் இருந்துசென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு, நீரின் தேவை சமாளிக்கப்பட்டு வருகிறது.

தூர் வாருவது உள்ளிட்ட மராமத்துப் பணிகள் முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக கீழணையில் இருந்து காவிரி தண்ணீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஏரியில் 41.05 அடி தண் ணீர் உள்ளது. வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 251 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையில் 8.5 அடி தண்ணீர் உள்ளது.

இந்த நிலையில் நேற்று வீராணம் எரியில் இருந்து விநாடிக்கு 6 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூதங் குடியில் உள்ள நீர்வாங்கி நெடு மாடத்தில் இருந்து நீரேற்று நிலை யம் வழியாக இந்த தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு அனுப்பப்படும் நீரின்அளவு படிப்படியாக உயர்த்தப் படும் என்று சிதம்பரம் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்