சிவகங்கை மாவட்டம் மானா மதுரையில் தடையை மீறி ஆட்டுச் சந்தை நடந்ததால் வியாபாரிகளை போலீஸார் விரட்டியடித்தனர்.
மானாமதுரையில் வியாழக் கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கும். கரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் கூடு வதை தவிர்க்க வாரச்சந்தை வைகை ஆற்றுப் பகுதி, ஆனந்த வல்லி அம்மன் கோயில் முன் பகுதி, பாகபத் அக்ரஹாரம், சிவகங்கை சாலை, தாயமங்கலம் சாலை உள்ளிட்ட இடங்களில் நடந்தன. மேலும் ஆட்டுச்சந்தை பேரூராட்சி அலுவலகம் முன்பும் நடந்து வந்தது. இந்நிலையில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து சிவகங்கை மாவட்டத்தில் வாரச்சந்தை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மானாமதுரை பேரூராட்சி நிர் வாகம் வாரச்சந்தை நடத்த தடை இருப்பதாக அறிவிப்பு செய்தது. மேலும் வைகை ஆற்றுக்குள் வாரச்சந்தை நடக்காதபடி அதிகாரி கள் தடுப்புகள் அமைத்தனர்.
ஆனால் நேற்று காலை ஆட்டு வியாபாரிகள் வழக்கம்போல பேரூராட்சி அலுவலகம் முன்பாக கூடினர். அங்கு வந்த போலீஸார், வியாபாரிகள், ஆடு வாங்க வந்தோரை விரட்டியடித்தனர்.
இதையடுத்து வியாபாரிகள் வைகை ஆற்றுக்குள் ஆங்காங்கே நின்று ஆடுகளை விற்பனை செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago