மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த திரு விளையாடல் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூல உற்சவத் திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆக.5 முதல் 10-ம் தேதி வரை கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் சந்திரசேகர் உற்சவம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஆவணி மூலத் திருவிழாவின் முதல் நாளான கருங்குருவிக்கு உபதேசம் நடை பெற்றது. 2-ம் நாளான நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் நடைபெற்றது. அப்போது பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து 3-ம் நாளான இன்று மாணிக்கம் விற்ற திருவிளையாடல் நடை பெறுகிறது. ஆக.17-ம் தேதி இரவு பட்டாபிஷேகமும், ஆக.19-ல் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் நடைபெறும். கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமையில் பணியாளர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago