பேரையூர், உசிலம்பட்டி, வத்திரா யிருப்பு அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளில் விவசாயி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகிலுள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ஜெகதீஸ் (40) உள்ளிட்ட சிலர் 11-ம் தேதி சூலப்புரத்தில் இருந்து வேன் ஒன்றில் விவசாய விளைபொருட்களை ஏற்றிக் கொண்டு கருமாத்தூர் சந்தைக்கு சென்றனர். அப்போது, தேனி- மதுரை மெயின் ரோட்டில் கரு மாத்தூர் அருகே திடீரென ஓட்டுநர் பிரேக் அடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் விவசாயி ஜெகதீஸ் உயிரிழந்தார். விஜய குமார், ராசாத்தி உட்பட6 பேர் காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக செக்கானூரணி போலீஸார் விசாரிக்கின்றனர்.
மதுரை உசிலம்பட்டி அரு கிலுள்ள இ.நடுப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவர் 11-ம் தேதி உசிலம்பட்டி-வத்தலக்குண்டு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. சம்பவ இடத்தில் பொன்னம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீஸார் விசா ரிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகிலுள்ள சுரைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (35). இவர் 11-ம் தேதி தனது பைக்கில் பேரையூர்-வத்திராயிருப்பு ரோட்டில் சென்றார். சிலமலைப்பட்டி சந்திப்பு அருகே முன்னால் சென்ற வேன் திடீரென நின்றதால் எதிர்பாராதவிதமாக அவரது பைக் வேனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் பால்ராஜ் உயிரிழந்தார். பேரையூர் போலீ ஸார் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago