இந்நிலையில் பாண்டி, அவரது நண்பர்கள் பால் பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் (எ) சீமைச்சாமி ஆகியோர் வந்த சிறிது நேரத்தில் நாகமலைபுதுக் கோட்டை பெண் காவல் ஆய்வாளர் வசந்தியும் அங்கு வந்தார். ஹர்சத்தை விசாரணைக்கென காவல் நிலையத்துக்கு வரும்படி கூறிய ஆய்வாளர், அவரது பணப்பையை வாங்கி சென்றார்.
இதுகுறித்து எஸ்பியிடம் ஹர்சத் புகார் தெரிவித்தார். அதன் பேரில் ஆய்வாளர் வசந்தி உட்பட 5 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வசந்தி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.
தேனியைச் சேர்ந்த பால்பாண்டி (42), சிலைமானைச் சேர்ந்த உக்கிரபாண்டி (62), திருத்தங்கல்லைச் சேர்ந்த சீமைச்சாமி (எ) கார்த்திக் (51) உள்ளிட்டோரை டிஎஸ்பி ரவி தலைமையிலான தனிப்படையினர் தேடினர். இதற்கிடையில் பால்பாண்டி, உக்கிரபாண்டி, கார்த்திக் ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் எஸ்.பி பாஸ்கரன் விசாரித்தார். இதைத்தொடர்ந்து மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஆய்வாளரின் உறவினர் பாண்டி உட்பட 2 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago