வடமாநில இளைஞர் கொலை தொழிலாளியிடம் விசாரணை :

By செய்திப்பிரிவு

சேலம் அன்னதானப்பட்டி தட்சிணாமூர்த்தி கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி சுந்தரம் (49). இவரது மனைவி ஜோதி (45). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசன்னகுமார் (37). இவர் பனமரத்துப்பட்டியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சுந்தரத்துக்கு பழக்கம் ஏற்பட்டு நண்பராகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் சுந்தரம், பிரசன்னகுமாரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், பிரசன்னகுமார் பலத்த காயங்களுடன் சுந்தரம் வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற அன்னதானப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், போதையில் இருந்த பிரசன்னகுமார், சுந்தரத்தின் மனைவி ஜோதியின் கையை பிடித்து இழுத்துள்ளார். இதில், ஆத்திரம் அடைந்த சுந்தரம் கட்டையால் தாக்கியதில் பிரசன்னகுமார் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து, சுந்தரத்திடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்