சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட அழகாபுரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், சாக்கடை கால்வாய், ஓடைகளில் கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளித்து கொசுக்களே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது அப்பகுதியில் நடைபெற்று வரும் சிறு பாலங்கள் அமைக்கும் பணி, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் கே.பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago