தனியார் மருத்துவமனையில் கரோனா இலவச தடுப்பூசி செலுத்த கரூர் வைஸ்யா வங்கி சிஎஸ்ஆர் நிதியில் ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளது.
தனியார் நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் கூட்டாண்மை திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் கரூர் பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஆர்) மூலம் தனியார் மருத்துவமனையில் இலவச கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிதி பெறும் விழா கரூர் நகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோரிடம் கரூர் வைஸ்யா வங்கி சார்பில் ரூ.10 லட்சத்துக்கான வரைவோலை வழங்கப்பட்டது. ஆட்சியர் த.பிரபுசங்கர் உடனிருந்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஏற்கெனவே கடந்தாண்டு ரூ.3.12 கோடியும், நிகழாண்டு ரூ.3 கோடியும் கரூர் வைஸ்யா வங்கி நிவாரண நிதி வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago