திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரெங்கநாதனின் 129-வது பிறந்தநாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக துணை வேந்தர் கா. பிச்சுமணி தலைமை வகித்து பேசும்போது, ‘‘எஸ்.ஆர்.ரெங்கநாதன் நூல்களை வகைப்படுத்தியதை ப்போல் டிஜிட்டல் நூலகத்தையும் வகைப்படுத்த வேண்டும். இன்றைய நூலகத்துறையில் இருக்கும் நூலகர்களுக்கு அந்த கடமை உள்ளது’’ என்றார்.
பல்கலைக்கழக நூலகர் ப.பாலசுப்பிரமணியன் எழுதிய, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை நாடக நூல் வெளியிட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உ.கணேசன், மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை நாடக நூலின் சிறப்புகளை எடுத்துரைத்தார். முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார்.
பல்கலைக்கழக உதவி நூலகர் க.கண்ணன், இரா.நேரு, ச.ரமேஷ் மற்றும் ஆய்வு மாணவர்கள், முதன் மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ் தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் எஸ்.தம்பான் உட்பட பலர் கலந்து கொண்டனர்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago