திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சுதந்திர தினத்தையொட்டி பயணி களின் உடமைகளை போலீஸார் சோதனையிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தேசிய கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதற்காக கடந்த சில நாட்களாக அணிவகுப்பு ஒத்திகையில் போலீ ஸார் ஈடுபட்டு வருகிறார்கள். இது போல், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடை பெறும் விழாவில் மாநகராட்சி ஆணையர் விஷ்ணுசந்திரன் தேசிய கொடியேற்றுகிறார்.
சுதந்திர தினத்தையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங் களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. திருநெல் வேலி ரயில் நிலையத் தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முருகன் ஆகியோர் தலைமை யிலான ரயில்வே போலீஸார் ரோந்து பணிகளை தீவிரப் படுத்தியுள்ளனர். அத்துடன் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago