விளாத்திகுளம், கோவில்பட்டி, மணியாச்சி உட்கோட்ட பகுதியில் உள்ள கோயில்களில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடிய 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விளாத்திகுளம் மீரான்பாளை யம் தெருவில் உள்ள முத்துமாரி யம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் அம்மனின் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர். இது குறித்து விளாத்திகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விளாத்திகுளம் டி.எஸ்.பி.பிரகாஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் கலா, உதவி ஆய் வாளர் காசிலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் கோயிலைச் சுற்றியுள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மோட்டார் சைக்கிளில் கோயில் பகுதியில் சுற்றிய 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று தனிப்படையினர் விளாத்திகுளம் வைப்பாறு பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கோயில் பகுதியில் சுற்றியவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி தெருவை சேர்ந்த கண்ணன்(43), டால் துரை பங்களாத் தெருவை சேர்ந்த சண்முகவேல் மனைவி செண்பக வல்லி என்ற ராணி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஈச்சந்தா என்ற பகுதியை சேர்ந்த அருட்செல்வம் மனைவி சண்முக சுந்தரி(32) என்பது தெரியவந்தது.
இவர்கள் 3 பேரும் விளாத்திகுளம் முத்துமாரிய ம்மன் கோயில், வேம்பார் சாலையில் உள்ள முத்துமாரி யம்மன் கோயில், முத்துலாபுரம் சிவன் கோயில், பசுவந்தனை அருகே செவல்பட்டி பத்திரகாளியம்மன் கோயில், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கருமாரியம்மன் கோயில், ஆத்தூர் அருகே முக்காணி ஆதிபரமேஸ்வரி கோயில் மற்றும் திருநெல்வேலி தாழையூத்தில் உள்ள ஒரு கோயிலில் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
3 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து, ரூ.7 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சண்முகசுந்தரி கடந்த 2018-ம் ஆண்டு கோவில்பட்டி செண்ப கவல்லி அம்மன் கோயிலில் நகைகளை திருடிய தாக கைதாகி தண்டனை பெற்றுள் ளார். தனிப்படையினரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனின் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago