கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோயில், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது கோயிலை சுற்றியிருந்த மண்திட்டு அடித்துச் செல்லப்பட்டதால், கோயில் சுற்றுச்சுவர் எப்போது வேண்டு மானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. கோயிலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் சுற்றுச்சுவரை வலுவாக கட்டவேண்டும் என, சமீபத்தில் குமரி மாவட்டத்தில் கோயில்களில் ஆய்வு செய்த இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். சுவர் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை சார்பில் ரூ.56.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறையின் மதுரை மண்டல செயற்பொறி யாளர் வெண்ணிலா தலைமை யிலான அதிகாரிகள், திக்குறிச்சி மகாதேவர் கோயிலில், ஆற்றின் கரையோரம் சுற்றுச்சுவர் கட்ட வேண்டிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago