காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை யில் உள்ள சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து இ-பதிவுடன் வருபவர்களிடம் காய்ச்சல் (உடல் வெப்பம்) பரிசோதனை செய்த பிறகே அனு மதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள வேலூர் மாவட்டத்தில் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு, பரதராமி மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்கு வரும் வாக னங்கள் இ-பதிவு இருந்தால் மட்டும் அனுமதி அளிக்கின்றனர். அதிகளவில் போக்குவரத்து உள்ள கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் சுகாதாரத் துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் (உடல் வெப்பம்) பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். அவர்களின் விவரங்களை சேகரித்து அனுமதிக்கின்றனர். கரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தால் மட்டும் சளி பரி சோதனை எடுக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago