இதுகுறித்து ஃபோசியா சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்து தமிழக அரசின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின்படி தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வருகிறோம். கரோனா தொற்று பரவலுக்கு எவ்விதத்திலும் காரணமாகி விடக்கூடாது என கவனமாக இருந்து வருகிறோம்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட எவ்வித தடையும் இல்லை. இருப்பினும் மாநகராட்சி கண்காணிப்பு படையினர் மாலை 5 மணிக்கு மேல் தொழில் நிறுவனங்களை மூட நிர்பந்திக்கின்றனர். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே 2 மாத ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் நலிவடைந்துள்ளன. இத்தகைய சூழலில் மாநகராட்சி அதிகாரிகளின் கெடுபிடிகள் தொழில் துறையினருக்கு மனச்சோர்வை அளிக்கின்றன. எனவே, தொழில் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க தடை எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago