கோவை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, உருளைக்கிழங்கு மண்டி, ஜடையம்பாளையம் காய்கறி மார்க்கெட் ஆகிய இடங்களில் கோவை மாவட்ட கரோனா கண்காணிப்பு அலுவலரும், வணிக வரித்துறை ஆணையருமான எம்.ஏ.சித்திக் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறும்போது, “கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நலன்கருதி சிகிச்சைக்கான கட்டணத்தை அரசே செலுத்தும்வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா சிகிச்சை அளிக்கஅனுமதி அளிக்கப்பட்டுள்ள மருத் துவமனைகள் தங்களிடமுள்ள கரோனா சிகிச்சை அளிக்கும் படுக்கைகளில் 10 சதவீத படுக்கைகளை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அளிக்க வேண்டும். பொது மக்கள்தவிர்க்க முடியாத காரணங்களுக் காக வெளியே செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.
அப்போது சுகாதாரத் துறை இணை இயக்குநர் சந்திரா, துணை இயக்குநர் அருணா, நகராட்சி ஆணையர் வினோத்குமார், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கண்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago