அவிநாசி சாலை மேம்பால திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் : இந்திய தொழில் வர்த்தக சபை கோரிக்கை

By செய்திப்பிரிவு

அவிநாசி சாலை மேம்பால திட்டத்தை தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று முன்தினம் கோவை வந்தார். அவரிடம் இந்தியதொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் சி.பாலசுப்ரமணியம், முன்னாள் தலைவர்வனிதா மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை திருச்சி சாலையில் சிங்காநல்லூர், பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம், சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் மற்றும் சாயிபாபா காலனி, தடாகம் சாலை லாலி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.

அவிநாசி சாலையில் தற்போதுகட்டப்பட்டுவரும் மேம்பாலம் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, சின்னியம்பாளை யம் வரை நீட்டிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போதைய தேவையை கருதி விரைவான போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

சத்தியமங்கலம் சாலையில் கணபதி முதல் சரவணம்பட்டி வரைஉயர்மட்ட மேம்பாலம் அமைக்கப் பட வேண்டும். கோவை - கரூர்விரைவுச்சாலை பசுமைச் சாலையாக அமைக்கப்பட வேண்டும். இந்த சாலையின் மூலமாக துறைமுக வர்த்தகம் மேம்படும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோவை விமானநிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதற்குரிய இட உரிமையாளர்களுக்கு உரிய விலையை விரைவாக கொடுத்து, நிலத்தை கையகப்படுத்தும் பணியை நிறைவு செய்ய வேண்டும். கோவை ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்