கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கடந்த நான்கு ஆண்டு களுக்கு மேலாக கோவையில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் களப்பணியில் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் உதவியோடு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு மூலம் வெள்ளலூர் குளக்கரையில் ‘மியாவாக்கி’ முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. மேலும், அங்கு மூலிகை, மலர் செடிகள் நட்டு பராமரிக்கப் பட்டுவருகின்றன. பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இரா.மணிகண்டனுக்கு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் 2019-ம்ஆண்டின் தென் இந்திய பிரிவுக் கான ‘பெஸ்ட் வாட்டர் வாரியர்’ (சிறந்த தண்ணீர் போராளி) என்ற விருதை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கியது. அப்போது கிடைத்த விருது தொகை ரூ.1.80 லட்சம் மூலம், தனியார் நிறுவனங்கள் உதவியுடன் பேரூர் பெரியகுளத்தின் கரையில் அடர்வனப்பூங்கா உருவாக்க மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள், மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) மற்றும் என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மணிகண்டன் கூறும்போது, “பேரூர் பெரிய குளக்கரையில் இருந்த ஆக்கிரமிப் புகளை அரசு அகற்றியது.
நீர்வளத் துறையின் அனுமதியுடன் அங்கிருந்த கட்டிடக் கழிவுகளை சுத்தம் செய்து நிலத்தை தயார் செய்து மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கும்பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். தற்போது அந்த இடத்தில் தமிழகம்மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்துவரப்பட்ட 200 வகையான நாட்டுமரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதற்காக குளங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஆகாயத்தாமரை கழிவுகள் அடியுரமாக கொட்டப்பட்டுள்ளன. மேலும், மூன்று பக்கமும் வேலியிட்டு சொட்டு நீர் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் சுமார் ரூ.6.50 லட்சம் செலவிடப் பட்டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago