இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “மாதந்தோறும் சம்பளம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம். வீட்டுக்கு மளிகை பொருட்கள் வாங்குவதிலிருந்து, வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது வரை மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்றனர்.
ஏஐசிசிடியு தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.தாமோதரன் கூறும்போது, “ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தவிர, மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் லாரி ஓட்டுநர், கணினி ஆபரேட்டர் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் 10-ம் தேதிக்கு முன் சம்பளம் கிடைக்க மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago