தடுப்பூசி செலுத்துவதற்கான இணைய செயலி உருவாக்கும் திட்டத்தை கைவிட்டது மாநகராட்சி :

By பெ.ஸ்ரீனிவாசன்

கரோனா தடுப்பூசி செலுத்துவதற் கென பிரத்யேக இணைய செயலி உருவாக்கும் திட்டத்தை கோவை மாநகராட்சி கைவிட்டுள்ளது.

கோவை மாநகரில் தடுப்பூசி மையங்கள் முன் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் ஏற்படும் தொற்று பரவலுக்கான வாய்ப்பு, டோக்கன் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அனைத்து தரப்பு பொதுமக்களும் எளிதில் அணுகும் வகையிலும் கரோனா தடுப்பூசி முன்பதிவு இணைய செயலி திட்டத்தை உருவாக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் பல்வேறு சூழ்நிலை சிக்கல்கள் காரணமாக தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “தடுப்பூசி இணைய செயலியை உருவாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டன.

சிறந்த இணைய செயலியை உருவாக்குவோருக்கு சிறப்பு பரிசுத் தொகை வழங்கவும் திட்டமி டப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

உரிய நேரத்தில் நமது கைக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை என்பதே அதற்கு முக்கிய காரணம்.

மக்கள் பயன்படுத்துவதற்காக இணைய செயலியை உருவாக்கி மக்களை முன்பதிவு செய்ய அனுமதித்து விட்டு, உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் தவறாகிவிடும். தற்போது, கோவை மாநகராட்சிக்கு ஒதுக்கப்படும் தடுப்பூசி அளவு குறைவாகவே உள்ளது.

மாநகரில் இன்னும் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது” என்றனர்.

மாநகராட்சி துணை ஆணையர் கு.விமல்ராஜிடம் கேட்டபோது, “கோவை மாநகராட்சிக்கென கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். போதிய தடுப்பூசிகையிருப்பு நிலை வந்தால் இணைய செயலி மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப் படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்