கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசாணையின்படி, சுயநிதி கலை அறிவியல், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் இதரசுயநிதிக் கல்லூரிகளில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப் பட்டுள்ளது.
இவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இம்மாணவர்கள் முதலாம் ஆண்டு, கல்லூரி சேர்க்கையின் போது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆவணங்களுடன் அந்தந்த கல்லூரிகளின் உதவி மையத்தை அணுகலாம்.
அரசிடம் இருந்து மாணவர் களின் கல்விக் கட்டணம் வழங்கப் படும் வரை, அம்மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த கல்லூரி நிர்வாகத்தினர் வற்புறுத்தக்கூடாது. கட்டாயமாக கட்டணம் வசூலித்தால் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஆகியோரிடம் நேரிலோ, தபால் மூலமாகவோ, 0422-2303778 என்ற தொலைபேசி எண்ணிலோ மாணவர்கள் புகார் அளிக்கலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago