அஞ்சலகங்களில் சர்வதேச சேவை தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் இருந்து 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கடிதம் மற்றும் பொருட்களை அனுப்பும் சர்வதேச சேவையை அஞ்சல் துறை மீண்டும் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்ததாலும், வெளிநாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும், அஞ்சலகங் களில் சர்வதேச சேவை நிறுத்தப்பட்டது. இதனால் வெளிநாடுகளுக்கு கடிதம் மற்றும் பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்திய அஞ்சல்துறை மீண்டும் சர்வதேச சேவையைத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் இருந்து சர்வதேச விரைவுத்தபால், பதிவுத்தபால், பார்சல் மற்றும் ஐடிபிஎஸ் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உடைகள், மருந்துகள், மளிகைப்பொருட்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகலாம் என ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்