தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் - மேல்மலையனூர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் :

By செய்திப்பிரிவு

தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தடுப்புநடவடிக்கைகளையொட்டி பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள். ஊர்வலங்கள். குடமுழுக்கு நடத்தக்கூடாது. அன்றாடம்நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜைகள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும். திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தரிசனம் செய்வதற்கு அந்தந்த கோயில் நிர்வாகம் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆடி பூரத்தை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலையிலேயே அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சூழலை பயன்படுத்திக்கொண்ட கோயில் ஊழியர்கள் சிலர் பக்தர்கள் ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ. 200 பெற்றுக்கொண்டு தரிசனம் செய்ய அனுமதித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.

இதுபற்றி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் செயல் அலுவலரான உதவி ஆணையர் ராமுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்களை அனுமதித்த கோயில் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பிறகு முழுமையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்