குறிஞ்சிப்பாடி பகுதியில் விதைப்பண்ணையில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் தற்போது குறுவை சாகுபடி 10 ஆயிரத்து 750 ஏக்கரில் நடைபெற்று வருகிறது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் முன்னோடிவிவசாயிகளின் வயல்களில் விதைப் பண்ணை அமைக்கப் பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டாரம் கல்குணம் கிராமத்தில் விவசாயி அலக்சாண்டர் வயலில் அமைக்கப்பட்ட விதைப் பண்ணை யினை குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தலைமையில் வேளாண் அலுவலர் அனுசுயா, உதவி விதை அலுவலர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்கினர்.
வயல்களில் படர்ந்துள்ள பச்சை பாசிகளை கட்டுப்படுத்தும் விதமாக ஏக்கருக்கு அரைகிலோ நன்கு பொடி செய்த மயில்துத்தம் (காப்பர் சல்பேட்) பாசன வாய்காலின் வாமடையில் வைத்து கசிந்து ஓடுமாறு செய்ய விவசாயிக்கு அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago