சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பு.ஆதனூர் கிராமத்தில் சுமார் 60 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் கம்மாபுரம், சிறுவரப்பூர்,விளக்கப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வரும் வடிகால் நீர் வந்து சேருகிறது.
இந்த ஏரியில் மழை வெள்ளக்காலங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கும்.
அவ்வாறு தேங்கும் உபரி தண்ணீர் வடிய வழியில்லாமல் உள்ளது. இதனால் ஏரி தண்ணீர் அகரஆலம்பாடி, முகந்தரியாங்குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள 600 ஏக்கர் விளைநிலங்களில் புகுந்து விடும்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியது:
பெரிய ஏரியின் கரைகள் வலுவில்லாமல் சாதாரண வரப்பு போல உள்ளது. மழைகாலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீர் அகரஆலம்பாடி, முகந்தரியாங்குப்பம் கிராமங்களில் பயிர்களில் புகுந்து நாசப்படுத்தி விடுகிறது. ஏரியின் வடிகால் மதகின் தண்ணீர் செல்லும் வழித்தடத்தை தூர்வாரி தண்ணீர் வடியும்படி செய்யவேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு கடந்த 20 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பெரியஏரியை பார்வையிட்டு தூர்வாரி கரைகளை பலப்படுத்தி, வடிகால் தடத்தையும் தூர் வாரிட எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago