புதுச்சேரியின் நலன்களை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்துபுறக்கணிக்கின்றனர் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி யுள்ளார்.
இது குறித்து நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசானது விவாதம் இல்லாமல் பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அவசர அவசரமாக கடல் மீன்வள மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
கரோனா தடுப்பூசி திருவிழா என்று, மிகப்பெரிய கூத்து புதுச்சேரியில் நடக்கிறது. இலக்கை நிர்ணயித்து, வீடுவீடாக சென்று தடுப்பூசி போட்டால் குறுகிய காலத்தில் இலக்கை அடைய முடியும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சமயத்தில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டிற்காக அரசு ஆணை வெளியிட்டோம். அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதை தடுத்து நிறுத்தினார். நீதிமன்றம் சென்றோம். அதை பரிசீலனை செய்யவில்லை. தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. தற்போது என்.ஆர்.காங்-பாஜக கூட்டணி அரசானது, 10 சத இடஒதுக்கீட்டை பெற முயற்சிக்க வேண்டும்.
பட்ஜெட்டுக்கான கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். எங்கள்ஆட்சியை மத்திய பாஜக அரசு புறக்கணித்தது போலவே தற்போதைய ஆட்சியையும் புறக்கணிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது. புதுச்சேரியை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago