மதுரையில் - கோவேக்சினை தொடர்ந்து ‘கோவிஷீல்டு’க்கும் தட்டுப்பாடு :

By செய்திப்பிரிவு

மதுரையில் இதுவரை கோவேக்சின் தடுப்பூசிக்கு மட்டுமே தட்டுப்பாடு இருந்த நிலையில், தற்போது கோவி ஷீல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாந கராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிரா மப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் கரோனா தடுப் பூசி போடப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக மதுரையில் கோவேக்சின் தடுப்பூசிக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. கோவிஷீல்டு ஓரளவு தட்டுப்பாடில்லாமல் கிடைத்து வந்தது. கடந்த 2 நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டவர்கள் குறைந்தது 12 வாரங்கள் (84 நாள்கள்) கழித்தும், கோவேக்சின் முதல் டோஸ் போட்டவர்கள் குறைந்தது 4 வாரங்கள் (28 நாள்கள்) கழித்தும் 2-வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும், கோவிஷீல்டு 2-வது டோஸை அதிகபட்சம் 16 வாரங்களுக்குள்ளும் (112 நாள்கள்), கோவேக்சின் 2-வது டோஸை 6 வாரங் களுக்குள்ளும் (42 நாள்கள்) போட்டால்தான் அதிக பலன் கிடைக்கும்.

நேற்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் கோவிஷீல்டு மிகக் குறைவான நபர்களுக்கே போடப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடவில்லை. இத னால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்