சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் சிவப்புநிற பெரிய பானை கண்டெடுக்கப்பட்டது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அக ழாய்வுப் பணி நடந்து வருகிறது.
இதுவரை கீழடி, கொந்தகை, அகரத்தில் 850-க்கும் மேற் பட்ட தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன.
தற்போது கீழடியில் சிவப்பு நிறத்திலான பெரிய பானை கண்டெடுக்கப்பட்டது. இதன் வாய்ப்பகுதி விட்டம் 30 செ.மீ., அகலம் சுமார் 60 செ.மீ. உள்ளது. பானையை தோண்டி எடுத்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். மேலும் இப்பானை குறித்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago