மதுரையில் தனியார் காப்பகத்தில் தாயுடன் தங்கியிருந்த குழந்தை களை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காப்பக நிர்வாகி உட்பட 9 பேரிடம் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
கரோனா ஊரடங்கின்போது, மதுரையில் இதயம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்ட காப்பகத்தில் தங்கியிருந்த ஆண் குழந்தையை சட்டவிரோதமாக விற்றனர். பின்னர் அக்குழந்தை கரோனாவால் இறந்ததாக நாடகமாடினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் விசார ணை நடத்தி 2 குழந்தைகளை மீட்டனர். மேலும் இதயம் அறக் கட்டளை நிர்வாகி சிவக்குமார், ஊழியர்கள் கலைவாணி, மதர்சா, இடைத்தரகர்கள், குழந்தைகளை விலைக்கு வாங்கிய தம்பதி என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் மாநில மனித உரிமைகள் ஆணை யம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இவ்வழக்கின் புகார்தாரரான சமூக ஆர்வலர் அசாருதீன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஹெலன்மேரி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று முன்தினம் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அதிகாரி சுந்தரேசன் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மேலும் மதுரை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள்ள காப்பக நிர்வாகி சிவக்குமார், ஊழியர்கள் கலைவாணி, மதர்சா உள்ளிட்ட 9 பேரிடம் நேற்று காலை மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி சுந்தரேசன் விசாரணை நடத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago