பழங்காநத்தம் கூட்டுறவுத் துறை மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.முருகன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனியப்பா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், துணைப்பதிவாளர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். காலியாக உள்ள கூட்டுறவு சார்பதிவாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்கத்தின் மாநிலச் செயலாளர் நவநீதிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நீதிராஜா, அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டப் பொருளாளர் தி. மணிகண்டன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago