நெல்லைக்கு 858 டன் யூரியா வரத்து :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்துக்கு 858 டன் யூரியா உரம் ரயில் மூலம் வந்துள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கார் பருவ நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாகுபடிக்கு தேவை யான உரங்கள் எம்எப்எல் நிறுவனத்தின் மூலமாக 315 டன் யூரியா, 68 டன் காம்ப்ளக்ஸ், ஐபிஎல் நிறுவனத்தின் மூலமாக 33 டன் யூரியா, 20 டன் பொட்டாஷ், ஸ்பிக் நிறுவனத்தின் மூலமாக 210 டன் யூரியா ஆகியவை திருநெல்வேலிக்கு வந்துள்ளன.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தங்கள் வட்டாரங்களிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடை களில் பெற்றுக்கொள்ள லாம். ஒரு மூட்டை யூரியாவுக்கு அரசு நிர்ணயித்த விலை ரூ.266.50. விவசாயிகள் உரம் வாங்க செல்லும்போது கண்டிப்பாக தங்களது ஆதார் அட்டையை கொண்டு சென்று மூட்டையின்மேல் குறிப்பிட்டுள்ள விலையை செலுத்தி உரமும், ரசீதும் பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயிகள் தங்கள் நிலங் களில் மண்பரிசோதனை செய்து பெறப்பட்ட மண்வள அட்டையின் அடிப்படையில் அல்லது வேளா ண்மைத்துறையின் பரிந்துரைப்படி உரமிட வேண்டும்.

தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்