வேலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் சிலர் வெளிநடப்பு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
இதில், மாநில துணைத் தலைவர் ஏகடூர் ஆனந்தன், மாநிலச்செயலாளர் எம்.ஜி.மோகன் ஆகியோர் சிறப்பு அழைப் பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநகர மாவட்டத் தலைவர் டீக்காராமன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சி.கே தேவேந்திரன் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சி.கே.தேவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய் தனர். மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம் காமராஜர் அறக் கட்டளைக்கு சொந்தமானது.
இக்கட்டிடம், தனியார் வசம் உள்ளதாகவும், அதனை மீட்கும் வரை எந்த விதமான கூட்டத்திலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் வெளிநடப்பு செய்தது குறித்து மாநகர மாவட்டத் தலைவர் டீக்காராமன் கூறும் போது, ‘‘வேலூர் காமராஜர் அறக்கட்டளையில் கட்சி மேலிடத் துக்கு தெரியாமல் எதுவும் நடை பெறவில்லை.
எனக்கு நிர்வாகிகள் யார் மீதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகள் மீது மேலிடத்துக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத் துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் இயங்கி வரும் கட்டிடம் காமராஜர் அறக் கட்டளைக்கு சொந்தமானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago