கரோனா பரவலை தடுக்க முகக்கவசம், கிருமிநாசினியை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா மூன்றாவது அலையின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிப்பதாக செய்திகள் வருகின்றன. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன், வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், சி.டி.ஸ்கேன் பரிசோதனை வசதிகளுடன் கூடிய ஆய்வக வசதியை இப்போதே ஏற்படுத்த வேண்டும். தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தாலுகா மருத்துவமனைகள், கிராமப்புற, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும்.
முகக்கவசங்கள், கிருமிநாசினியை அரசே இலவசமாக வழங்க வேண்டும். மூன்றாவது அலையிலிருந்து கோவையைப் பாதுகாக்க போர்க்கால நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago