தென்னிந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தலைவர் கே.ஜலபதி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அளித்த கடிதத்தில், ‘‘தமிழகத்தில் தொழில் துறையினர் மத்தியில் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்வதில் இன்னும் உரிய விழிப்புணர்வு இல்லை. பல்வேறு சந்தேகங்கள் நீடிக்கின்றன. இதனால் தொழில் துறையினர் உள்ளிட்டோருக்கு பட்டய கணக்காளர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒருவகை தொழில் சார்ந்த உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தகைய தொழில்களை வளர்க்க அந்தந்த மாவட்டங்களில் தொழிற்பூங்காக்களை உருவாக்க வேண்டும். தொழில்முனைவோருக்கு உற்பத்தியை சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி செய்யவும் வழிகாட்டுவதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். தொழில் துறையினரின் பிரச்சினைகளை அவ்வப்போது அடையாளம் கண்டு தீர்வு காண அனைத்து தரப்பினர் சார்ந்த குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago