கோவைக்கு : 450 மெட்ரிக் டன் : யூரியா ஒதுக்கீடு :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோவை மாவட்டத்தில் தற்போது காரீப் பருவ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, மங்களூரு துறைமுகத்தில் இருந்து, சரக்கு ரயில் மூலம் 1,320 மெட்ரிக் டன் ஐ.பி.எல் யூரியா உரம் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன.

கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 450 மெட்ரிக் டன் யூரியா உரம், அனைத்து வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்