மூடப்பட்டுள்ள ஏஎப்டி மில் வளாகத்தில் கட்டுப்பாட்டு மையம் - சிசிடிவி பொருத்தி புதுச்சேரி முழுக்க கண்காணிப்பு : முதல்வர் ரங்கசாமி தகவல்

By செய்திப்பிரிவு

சிசிடிவி கேமரா பொருத்தி புதுச்சேரி முழுக்க கண்காணிக்கும் திட்டத்துக்கான கட்டுப்பாட்டு மையம் ஏஎப்டி வளாகத்தில் அமைகிறது. தனியார் பங்களிப்புடன் ஏஎப்டி மில்லை இயக்க திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ஏஎப்டி மில் வளாகத்துக்கு முதல்வர்ரங்கசாமி நேற்று நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசுத்துறை செயலர்கள் அருண், வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி ஏஎப்டி மில்லை மீண்டும் சீரமைத்து தனியார் பங்களிப்புடன் இயக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பட்ஜெட்கான நிதி ஒப்புதல் இன்னும் வரவில்லை. அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் மற்றும் பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன். அப்போது ஏஎப்டி நிதி உட்பட புதுச்சேரி மாநில கோரிக்கைகள் குறித்துவலியுறுத்தப்படும்.

புதுச்சேரியை கண்காணிக்கும் புதிய சிசிடிவி கேமரா கண் காணிப்பு திட்டம் வருகிறது. இதற்காக கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கு ஏஎப்டி இடத்தை பார்வையிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

அப்போது ஏஎப்டி மில்லில் பணியாற்றிய ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பணிக்கொடை, நிலுவை சம்பளம், ஓய்வூதியம் வழங்க கோரிக்கை வைத்தனர். அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி கோரிக்கைள், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என முதல்வர் கூறினார்.

கட்டுப்பாட்டு மையம் தொடர் பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.60 கோடியில் ஒட்டுமொத்த புதுச்சேரி நகரத்தை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக 100-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும்.

இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஏஎப்டி மில்லில் சி யூனிட்டில் உள்ள இடத்தை முதல்வர் பார்வையிட்டார். சி யூனிட்டில் உள்ள குடோனில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் அமர்ந்து பணி செய்ய முடியும். அதனால் இங்கு மையத்தை அமைக்க வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்