புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 5,699 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 58, காரைக்காலில் 21, ஏனாமில் 3, மாஹேவில் 19 என 101 (1.77 சதவீதம்) பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 194 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 657 பேரும் என மொத்தமாக 851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,800 ஆகவும், இறப்பு விகிதம் 1.48 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 84 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago