சாலைகளை தரமாக போடுவதை கண்காணிக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு

By செய்திப்பிரிவு

மாநகராட்சியில் சாலைகளை ஒப்பந்ததாரர்கள் தரமாக போடுவதை கண்காணிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மகாளிப்பட்டி ரோடு பாரதிதாசனார் மேல்நிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொண்டுள்ள கட்டிட பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டார். தொடர்ந்து காவேரி நகர் குறுக்குத் தெருவில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்மண் சாலை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு சாலைப்பணிகளை ஒப்பந்தாரர்கள் தரமாகவும், விரைவாகவும் போடுவதை கண்காணிக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் சாலைகளில் ஏற்படும் சேதங்களை உடனடியாக மேற்கொண்டு சாலைகளை சீராக வைத்துக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மண்டலம் அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறும், பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்குமாறும், நோயாளிகள் அமருவதற்கு உரிய இருக்கைகள், வளாகத்துக்குள்ளே நோயாளிகள் அமரும் இடத்தில் மேற்கூரை வசதிகள் ஏற்படுத்துமாறும் மருத்துவ அலுவலரிடம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்