பிரத்தியேக ‘சர்வே ஆப்’ மூலம் - பள்ளி செல்லா மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி செல்லா மாணவர்களை கண்டறியும் வகையில் பிரத்தியேக ‘சர்வே ஆப்’ மூலம் கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பெண் குழந்தைகள் தொடக்க பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே அதிக அளவில் இடைநின்று விடுவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணியை இந்தாண்டு கூடுதல் கவனத்துடன் 'சர்வே ஆப்' மூலம் கணக்கெடுப்பு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதனையொட்டி மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் ஆலோசனையின்படி நேற்று முதல் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருஞானம், கணக்கெடுக்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறார். மதுரை மாவட்டத்தில் 2280-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் பள்ளி செல்லா மாணவர்கள் பற்றி கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி ஆக.31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்