ஓணம் பண்டிகை வரும் 21-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக-கேரள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஏடிஎஸ்பி ராஜேந்திரன், இடுக்கி கலால்துறை இணை ஆணையர் சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓணம் பண்டிகை காலங்களில் கஞ்சா, எரிசாராயம், போலி மது உள்ளிட்டவை கேரளாவுக்கு அதிகம் கடத்தப்படுவது வழக்கம். இவற்றைத் தடுக்க ஆலோசிக்கப்பட்டது. இரு மாநில எல்லைகளான கம்பம் மெட்டு, மந்திப்பாறை, மூங்கிப்பள்ளம், குமுளி, போடிமெட்டு ஆகிய இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை பலப்படுத்துவது, இருமாநில போலீஸாரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
உத்தமபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி, இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago